×

இந்தியாவில் முதன்முறையாக குடல் புற்றுநோய்க்கு ரோபோடிக்ஸ் சைட்டோரிடக்டிவ் அறுவை சிகிச்சை: அப்போலோ மருத்துவமனை சாதனை

சென்னை: இந்தியாவில் முதன்முறையாக குடல் புற்றுநோய்க்கு ரோபோடிக்ஸ் சைட்டோரிடக்டிவ் அறுவை சிகிச்சை செய்து அப்போலோ மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பெண்ணுக்கு ஹைபர்தெர்மியா இன்ட்ராபெரிட்டோனியல் ஹீமோதெரபி உடன் ரோபோடிக்ஸ் சைட்டோரிடக்டிவ் அறுவை சிகிச்சையை (சிஆர்எஸ்) அப்போலோ மருத்துவமனை புற்றுநோய் மையம் வெற்றிகரமாக செய்து முடித்தது.

இதுகுறித்து அறுவை சிகிச்சை மருத்துவர் அஜித் பை அளித்த பேட்டி: பொதுவாகவே மருத்துவமனையில் புற்றுநோய்க்கு மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை பெரிய காயத்தை ஏற்படுத்தும். இதனால் நோயாளி குணமாக நீண்ட நாட்களாகும். இதனை கருத்தில் கொண்டு, ரோபோட் பயன்படுத்தி புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க முயற்சி செய்தோம். அதன்படி மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த அஞ்சனா (51) என்ற பெண்ணுக்கு ஹைபர்தெர்மியா இன்ட்ராபெரிட்டோனியல் ஹீமோதெரபி உடன் ரோபோடிக்ஸ் சைட்டோரிடக்டிவ் அறுவை சிகிச்சை செய்து, முற்றிலும் குணப்படுத்தியுள்ளோம். இது நோயாளிக்கு சிறிய காயத்தை மட்டுமே ஏற்படுத்தும்.

உலகில் ஸ்பெயின், சீனா உள்ளிட்ட நாடுகளில் குறைவான மருத்துவர்கள் மட்டுமே இந்த சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர். ஆனால், இந்தியாவில் இதுபோல ஒரு சிகிச்சை மேற்கொண்டு, புற்றுநோயை குணப்படுத்தியதாக யாரும் பதிவு செய்ததில்லை. ரோபோடிக்ஸ் சைட்டோரிடக்டிவ் அறுவை சிகிச்சையை அனைத்து வகையான மக்களும் செய்து கொள்ளலாம். இதற்கான செலவு நோயாளியின் நிலையை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. இதற்காக மருத்துவக் காப்பீடு உதவிகளும் உள்ளது. அதேபோல குணமான நோயாளிகளின் வெற்றிகரமான சிகிச்சை அறிக்கையை கொண்டு அரசிடம் மருத்துவக் காப்பீடு திட்டத்தை இதற்கு செயல்படுத்த கோரிக்கை விடுக்க உள்ளோம். அரசு இதனை ஏற்கும் என நம்பிக்கை இருக்கிறது.

The post இந்தியாவில் முதன்முறையாக குடல் புற்றுநோய்க்கு ரோபோடிக்ஸ் சைட்டோரிடக்டிவ் அறுவை சிகிச்சை: அப்போலோ மருத்துவமனை சாதனை appeared first on Dinakaran.

Tags : India ,Apollo Hospitals ,Chennai ,Apollo Hospital ,West Bengal ,
× RELATED ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை